விவசாயிகள் பிரச்சினைக்காக கர்நாடகாவில் இன்று பந்த்! இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று நடைபெற்றுவரும் பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
கர்நாடகா மாநிலத்திற்க்கும் கோவா மாநிலத்திற்கும் நடுவே கலசா பண்டூரி என்ற நதி இணைப்பு திட்டத்தை கர்நாடகா அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கோவா மாநிலம் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதனை கர்நாடக விவசாயிகள் சங்கம் கண்டித்து வருகிறது.

கர்நாடகாவில் சமீப காலமாக விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்துவருகிறது. இதை தடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகம் தழுவிய பந்த்துக்கு இன்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பந்த் காரணமாக, தமிழக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால், பெங்களூர் வரும் பஸ்கள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டன. ஆனால் பெங்களூரில் பந்த்துக்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
ஆனால், மைசூர், மண்டியா போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பந்த்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து பெங்களூருக்கு படிப்படியாக தமிழக பஸ்கள் இயக்கப்பட தொடங்கியுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications