Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் முதற்கட்ட தேர்தல்: 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவு.. 2017-ஐ ஒப்பிட்டால் வாக்குப்பதிவு மந்தமாம்!

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத்தில் நேற்று 89 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 60.23 சதவீத ஓட்டுகள் பதிவானது. கடந்த 2017 ஆண்டை ஒப்பிடும்போது 6 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. இதற்கிடையே 93 சட்டசபை தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று 50 கிலோமீட்டருக்கு திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார்.

குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு பாஜக தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

குஜராத்தை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்ற தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இழந்த செல்வாக்கை மீட்க காங்கிரசும், புதிதாக ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி கட்சியும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு

89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு

இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று 19 மாவட்டங்களில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டுக்கள் அளித்தனர். பல இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

அமைதியாக நடந்த தேர்தல்

அமைதியாக நடந்த தேர்தல்

குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. எந்த இடங்களிலும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. பல இடங்களில் பழுதுகள் உடனடியாக சரிசெய்யப்பட்ட நிலையில் சில பகுதிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதுதவிர தேர்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

60.23 சதவீத ஓட்டு பதிவு

60.23 சதவீத ஓட்டு பதிவு

இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று நடந்த குஜராத் தேர்தலில் மொத்தம் 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 73.02 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தாபி மாவட்டத்தில் 72.32 சதவீத ஓட்டுக்களும், சூரத், ராஜ்கோட் உள்பட 8 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் கடந்த 2017 ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 66.75 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. ஆனால் நேற்றைய முதற்கட்ட தேர்தலில் 60.23 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது இது குறைவாக அமைந்துள்ளது.

2வது கட்ட தேர்தல்

2வது கட்ட தேர்தல்

குஜராத்தில் இன்னும் 93 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் குஜராத்தில் இன்னும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர். 2ம் கட்ட தேர்தலையொட்டி நேற்று பிரதமர் நரேந்திரமோடி திறந்த வாகனத்தில் நேற்று குஜராத்தின் அமதாபாத்தில் 50 கிலோமீட்டர் தூரம் பயணித்து பிரசாரம் செய்தார். 2 கட்ட தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் வரும் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+