மைனர் மகளை சீரழித்த தந்தைக்கு சிறை... பிறந்த குழந்தையை சிறையிலேயே பராமரிக்க உத்தரவு
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மைனர் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். மேலும், அவர் மூலமாக மகளுக்குப் பிறந்த ஆண் குழந்தையையும் சிறை வளாகத்திலேயே அவர் பராமரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோரேனா மாவட்டம் ஜீம்னி கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் சிங். இவர் தனது மைனர் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அப்பெண்ணிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

மூடி மறைக்கப் பட்ட இந்த விவகாரம் சில தொண்டு நிறுவனங்கள் மூலம் கடந்தவாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக விகாஸ் சிங் மீது வழக்கு தொடரப் பட்டது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், விகாஸ் சிங்கை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. மேலும், அவருடைய மகள் மைனர் என்பதால், அவர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.
இந்நிலையில், மகளின் ஆறு மாத ஆண் குழந்தையை பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்க இயலாது என்பதால், அக்குழந்தையை விகாஸ் சிங் சிறையில் வைத்து பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, குழந்தையை சிறையில் பராமரிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் சிறை வளாகம் விகாஸ் சிங்கிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications