அடப்பாவமே.. குஜராத்தில் 23 ஆடுகளை காக்க முயன்ற தந்தை, மகன் பலி! பைபர்ஜாய் புயலின் கோரத்தாண்டவம்
காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயலால் குஜராத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் ஆடுகளை பாதுகாக்க சென்ற தந்தையும் மகனும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத்தின் வளைகுடாவை ஒட்டிய பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சிஹோர் அருகே உள்ள பந்தார் கிராமத்தில் பைபர்ஜாய் புயலின் காரணமாக பலத்த சூறைக் காற்றும், அதி தீவிர கனமழையும் கொட்டித் தீர்த்தது. அப்போது அங்கிருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் மழை வெள்ளம் தேங்கியது. இந்த நிலையில்தான் அந்த சோக சம்பவமும் அங்கு அரங்கேறி இருக்கிறது.

அதி தீவிர கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் நீர் வேகமாக நிரம்பியது. அந்த பள்ளத்தாக்கில்தான் ராம்ஜி பார்மர் என்ற 55 வயது நபரின் ஆடுகள் மேய்ந்துகொண்டு இருந்தன. இந்த நிலையில் பள்ளத்தாக்கில் வெள்ளம் புகுந்து ஆடுகள் சிக்கி இருப்பத அறிந்த ராம்ஜி பார்மர் தன்னுடைய 22 வயது மகன் ராகேஷ் பார்மர் அழைத்து உள்ளார்.
இருவரும் அந்த பள்ளத்தாக்கில் இறங்கி ஆடுகளை காப்பாற்ற முயன்ற நிலையில் அவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரது உடல்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பள்ளத்தாக்கிற்கு அருகே சில தூரம் தொலைவில் இருவரது உடல்களும் கிடந்து இருக்கின்றன. இவர்கள் காப்பாற்ற சென்ற 22 ஆடுகளும், 1 செம்மறி ஆடும் நீரில் மூழ்கி இருந்து உள்ளன.

குஜராத்தில் பைபர்ஜாய் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்ச் மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களும் அடங்கும். கட்ச் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், "கட்ச் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. முன்கூட்டியே மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியதால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது.
பலத்த காற்று வீசியதால் சில மரங்கள், மின் கம்பங்கள் வேறோடு சாய்ந்து இருக்கின்றன." என்றார். இந்த புயலின் காரணமாக 22 பேர் இதுவரை காயமடைந்து உள்ளன. 23 விலங்குகள் இதில் உயிரிழந்து இருக்கின்றன. அந்த 23 விலங்குகளுமே உயிரிழந்த ராம்ஜி பார்மரின் ஆடுகள் என்றே சொல்லப்படுகின்றன.
இது அல்லாமல் 524 மரங்கள் மரங்கள் வேறோடு முறிந்து இருக்கின்றன. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதன் காரணமாக 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய மீட்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications