சலித்து போன மனைவி.. அடுத்த கல்யாணத்திற்கு ரெடியான மாப்பிள்ளை.. அதுக்குன்னு இப்படியா.. அலறிய போலீஸ்
வேறு ஒரு திருணமத்திற்கு திட்டமிட்ட வருண் குழந்தையை கொலை செய்துள்ளார்.
செங்கல்கட்டு: மிஸ்டு கால் மூலம் பழகிய காதலியை கர்ப்பமாக்கி குழந்தை பெற்றெடுத்துவிட்டு வேறு ஒரு திருணமத்திற்கு திட்டமிட்ட இளைஞர் தனது 4 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் வருண்(20). இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு மிஸ்டு கால் வந்திருக்கிறது. மீண்டும் அழைத்து பேசிய போது எதிர்முனையில் விஜயலட்சுமி(20) எனும் இளம் பெண் பேசியிருக்கிறார். தவறுதலாக அழைப்பு வந்துவிட்டதாக விஜயலட்சுமி கூற, வருண் தொடர்ந்து பேசியுள்ளார். இப்படியாக இருவரும் நண்பர்களான நிலையில், நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
பின்னர் ஒரு நாள் சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் விஜயலட்சுமியை வருண் நேரில் சென்று சந்தித்துள்ளார். பின்னர் இப்படியே அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் விஜயலட்சுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்ள வலியுறுத்த இருவரும் திருமணம் செய்துகொண்டு மாடம்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

வேறு திருமணம்
ஏற்கெனவே வாரத்திற்கு மூன்று நாட்கள் தாய் வீட்டிற்கு சென்று வந்த வருண், குழந்தை பிறந்ததால் வீட்டிற்கு போகாமல் இருந்திருக்கிறார். இதனையடுத்து வருணின் பெற்றோர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து திருமணத்திற்கு பெண் பார்த்திருப்பதாகவும் எப்போது திருமணம் வைத்துக்கொள்ளலாம் எனவும் கேட்டிருக்கின்றனர். ஆனால், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருப்பதாக வருண் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் குழந்தையையும், காதல் மனைவியையும் வேறு எங்காவது விட்டுவிட்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வருணும் வேறு ஒரு திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவியை கழற்றிவிட திட்டமிட்டுள்ளார்.

குழந்தை
இதற்கிடையில் குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிவிட்டது எனவே வீட்டு அழைத்து செல் என வருணிடம் மனைவி விஜயலட்சுமி கேட்க, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வருண் "எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று கூறியிருக்கிறேன். என்னுடைய நண்பருக்கு குழந்தை இல்லாததால் நம்முடைய குழந்தையை அவருக்கு கொடுத்துவிட்டு நாம் வேறு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்" என வருண் கூறியுள்ளார். தொடக்கத்தில் விஜயலட்சுமி இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், வருண் வற்புறுத்தி சம்மதம் பெற்றிருக்கிறார். இப்படியாக இரண்டு மாதத்திற்கு முன்னர் குழந்தையை வருணிடம் விஜயா கொடுத்தனுப்பியுள்ளார்.

திட்டம்
ஆனால் இந்த இரண்டு மாதங்களில் குழந்தையின் எந்த புகைப்படத்தையும் வருண் காட்டவில்லை. மேலும், குழந்தையை நேரில் சென்று பார்ப்போம் என்று விஜயலட்சுமி கேட்டதற்கு வருண் ஏதேதோ சாக்கு சொல்லி காலம் தள்ளியிருக்கிறார். வருணின் நடத்தை மற்றும் முன்னுக்கு பின் முரணான பேச்சால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி காவல்துறையினரிடம் புகார் அளிக்க, உண்மை வெளியே வந்திருக்கிறது. அதாவது வேறு திருமணத்திற்கு முயன்ற வருண் அதற்கு தடையாக இருந்த குழந்தையை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார். எனவே தனக்கு நண்பன் இருப்பதாகவும், அவருக்கு குழந்தை இல்லை என்று பொய் சொல்லி குழந்தையை வீட்டிலிருந்து எடுத்துச் சென்றிருக்கிறார்.

விசாரணை
இப்படி கொண்டு செல்லப்பட்ட குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்து அதனை மாடம்பாக்கத்தில் உள்ள ஒரு முட்புதரில் புதைத்திருக்கிறார். இந்த விஷயங்கள் காவல்துறையினரின் விசாரணையில் வெளியே வர, தற்போது வருண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த விஷயத்தில் வருணின் குடும்பத்தினர் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications