Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயசுக்கு வந்த மகளின் தலையை.. கையில் எடுத்து கொண்டு.. அவர் பாட்டுக்கு நடந்து.. அலறிய போலீஸ்..!

மகளின் தலையுடன் ரோட்டில் நடந்து சென்ற தந்தை கைதானார்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து கொண்டு, ரோட்டில் கூலாக நடந்து சென்று கொண்டிருந்தவரை பார்த்து மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

Recommended Video

    உ.பி.: காதலித்ததால் தந்தை வெறிச்செயல்... மகளின் தலையை துண்டித்து கொடூரம்!

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஷ் குமார்... இவர்தான் அந்த வித்தியாசமான தகப்பன்.. இவரது மகளுக்கு 17 வயதாகிறது..

    அந்த மகளின் தலையைதான் கையில் பிடித்து கொண்டு வேக வேகமாக நடந்து கொண்டிருந்தார். இதை பார்த்த கிராமத்தினர், பதறி போய் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்..

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அதற்குள் சர்வேஷ்குமார் கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருந்தார்.. எந்தவித டென்ஷனும், சலசலப்பும் இல்லாமல் சாலையில் அமைதியாகவே சென்று கொண்டிருந்தார். இதை கண்ட அந்த பகுதி மக்கள், தங்களுடைய செல்போனில் இதை வீடியோ எடுத்தனர். இதனிடையே, போலீசார் சர்வேஷ்குமாரை விரட்டி பிடித்தனர்..

    காதல்

    காதல்

    நடுரோட்டிலேயே என்ன நடந்தது என்று விசாரித்தனர்.. போலீசாரின் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகவே பதில் சொன்னார் சர்வேஷ்.. இதை பார்த்த போலீசாருக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.. மகள் காதல் விவகாரத்தில் சிக்கி கொண்டாராம்.. காதலை கைவிடும்படி சொல்லியும் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.. சர்வேஷூக்கு காதல் என்றாலே அலர்ஜியாம்.. அதனால், ஆத்திரத்தில், மகளின் தலையை வெட்டி எடுத்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    தலை

    தலை

    மகளின் உடம்பு எங்கே என்று கேட்டனர்.. அதற்கு சர்வேஷ், நான் கொலை செய்யும்போது தலையை மட்டும்தான் வெட்டினேன்.. அந்த சமயம் வீட்டில் யாருமே இல்லை.. அதனால் உடம்பும் வீட்டில்தான் ஒரு ரூமில் இருக்கிறது" என்றார். இதையடுத்து சர்வேஷ் குமாரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்..

    கைது

    கைது

    தந்தை மகளின் தலையுடன் ரோட்டில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.. இந்த உத்தரபிரதேசத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்க போகிறதோ தெரியவில்லை.. ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம் தான் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.. எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் விமர்சனம் செய்தாலும், ராம ஜென்மபூமியில் எதுவுமே மாறவில்லை..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+