Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாமனார்".. படுக்கையறை "விருந்தாளி".. துடிதுடித்த கர்ப்பிணி.. மாமியார் வேற.. போலீக்கு ஓடிய அபலை பெண்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: இளம்பெண் ஒருவருக்கு பாலியல் அக்கிரமம் நடந்துள்ளது.. ஒரு சில சம்பவங்கள் மட்டுமே போலீசாருக்கு தெரியவந்துள்ள நிலையில், தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள். ஆனால், இதைக்கேட்டே ஒட்டுமொத்த பேரும் வெலவெலத்து போயிருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் அந்த நபர்.. அதே பகுதியில் ஒரு ஹோட்டலை சொந்தமாகவே வைத்து நடத்தி வருகிறார்.. இவருக்கு மனைவி, மகன் போன்றோர் உள்ளனர். மகனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துவிட்டார்.

Father in Law hotelier and why did Daughter in law go to Rajkot Police Station

இவர்கள் அனைவருமே ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.. அந்த மருமகளுக்கு 21 வயதுதான் ஆகிறது.. இந்நிலையில், திடீரென ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசில் அந்த மருமகள் புகார் மனுவுடன் நுழைந்தார்.

டார்ச்சர்கள்: அந்த புகாரில், தன்னுடைய கணவர், மாமனார், மாமியார் 3 பேரும் சேர்ந்து, ஆபாச படங்களில் நடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால், தொடர்ந்து டார்ச்சர் தருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.. போலீசாரும் இந்த புகாரின் பேரில் விசாரணையை துவங்கினர்.

அப்போதுதான், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது.. அதாவது, இந்த பெண் திருமணமாகி அடுத்த சில மாதங்களில் கர்ப்பமாகி உள்ளார்.. அந்த நேரத்தில், அவரை நிர்வாணமாக வீடியோக்கள், போட்டோக்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்களாம்.. இப்படி ஒரு ஐடியாவை, மகனுக்கு தந்ததே, அந்த ஓட்டல் ஓனர் மாமனார்தான்.

அதிர்ச்சி: உடனே மகனும், தன் மனைவியிடம் சென்று, நிர்வாண வீடியோக்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன இளம்பெண், மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், கட்டாயப்படுத்தி உள்ளனர்.. தாங்கள் சொல்வது போல் கேட்காவிட்டால், கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.. இறுதியில், ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து நிர்வாண போட்டோக்களையும் வீடியோக்களையம் எடுத்துள்ளனர்..

இதற்கு பிறகு, அந்த மருமகளின் பெட்ரூமில், சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கிறார் அந்த மாமனார்.. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார்.. கணவரிடம் இதை சொல்லி அழுதுள்ளார்..

கேமரா பொருத்தம்: அதற்கு அந்த கணவர், "நாம் இந்த ரூமில் உறவு கொள்வதை, என் அப்பா அவருடைய ரூமில் பொருத்தியுள்ள டிவி மூலம் ரசிப்பார்" என்றாராம். இதைக்கேட்டதும் அந்த பெண் வெலவெலத்து போய்விட்டார்.

இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு அதிர்ச்சி அந்த பெண்ணுக்கு காத்திருந்தது.. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மீண்டும் மருமகளை நிர்வாண வீடியோக்கள், நிர்வாண போட்டோக்களை எடுக்க வேண்டும் என்று மாமனார் ஆசைப்பட்டுள்ளார்.. ஆபாச வெப்சைட்டில் இவைகளை பதிவிட்டால், நிறைய பணம் கிடைக்கும் என்பதால், அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.. அதற்கு அந்த பெண் மறுப்பு சொல்லவும், கணவரும், மாமனாரும் சேர்ந்து மிரட்டல் விடுத்து, ஆபாச வீடியோவில் நடிக்க வைத்துள்ளனர்.

பாலியல் டார்ச்சர்: இப்படி தினம் தினம் அந்த குடும்பத்தில் சிக்கி சீரழிந்து, பலவிதமான பாலியல் டார்ச்சருக்கு உள்ளாகிய நிலையில், கடைசியில் அந்த வீட்டிலிருந்து தப்பி, தன்னுடைய குடும்பத்தாரிடம் விஷயத்தை சொல்லி அழுதுள்ளார் இளம்பெண்..

இதைக்கேட்டு, பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்துபோனார்களாம். இவர்களை சும்மாவிடக்கூடாது என்று முடிவெடுத்து, அதற்கு பிறகுதான் போலீசுக்கு போகும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். கணவர், மாமனார் மாமியார் மீது புகார் தரப்பட்டதையடுத்து, போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

கொடூரம்: கர்ப்பமாக இருக்கும்போது, நிர்வாண வீடியோவை மாமனார் எடுக்க சொன்னதற்கு காரணம், அந்த பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களை அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.. இவர்கள் ஒவ்வொரு முறையும் எடுக்கும் வீடியோ, போட்டோக்களை வாட்ஸ்அப் குரூப்புகளுக்கும் அடிக்கடி அனுப்பி வைத்தபடியே இருந்திருக்கிறார்கள். இவர்கள் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசார் இன்னமும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும் சம்பந்தப்பட்ட மாமனார், மாமியார், கணவனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இதில் இன்னொரு பயங்கர சம்பவமும் நடந்துள்ளது.

லைவ் ஒளிபரப்பு: அதாவது, மருமகளை ஆபாச வீடியோக்களை எடுத்தபோது, அவைகளைஒரு ஆபாச தளத்தில் நேரடியாகவே ஒளிபரப்பியிருக்கிறார்கள்.. இப்படி லைவ் நிகழ்ச்சி என்றால், இதற்கு பணம் கிடைக்கும் என்பதாலேயே இவ்வாறு செய்ததாக கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்த பெண்ணை, ஹோட்டலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கு மூன்று ஆப்பிரிக்கர்களிடம் நெருங்கி பழகுமாறு வற்புறுத்தவும் செய்தார்களாம்.. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது.. இதற்கு பிறகு அந்த மாமியார் வலுக்கட்டாயமாக, தொற்று பகுதியில் களிம்பு போல மருந்தை பூசியதாகவும் சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து சோர்ந்து போய்தான், அந்த பெண் இப்போது போலீசின் உதவியை நாடியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+