பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!
டெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்ற தாய், தந்தை பெயரை சொல்லாமலேயே பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்களைப் பெற முடியும் என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருமணமாகாமல் குழந்தை பெற்ற பெண் வாரிசுதாரரை நியமிக்கும் போது தந்தை பெயர் அவசியம் என்கிறது சட்ட நடைமுறைகள். இதை எதிர்த்து பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் அபய் மனோகர் சப்ரே அளித்த தீர்ப்பு:

குழந்தையின் தந்தை என்று கூறப்படும் மனிதர் தன்னுடைய குழந்தை பற்றி எந்த அக்கறையும் வெளிப்படுத்தவில்லை. அதுபோன்ற மனிதருக்கு தந்தை என்ற சட்டரீதியான அங்கீகாரம் அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
அப்படியான ஒரு தந்தையை ஒரு குடும்பத்தில் திணிப்பது சரியானது அல்ல.
இந்து மதத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அக்குழந்தையை பெற்றெடுத்த உரிமையில் இயல்பாகவே அக்குழந்தையின் சட்டரீதியான பாதுகாவலர்களாக அங்கீகாரம் பெறுகின்றனர்.
குழந்தையின் தந்தை பெயரை அல்லது அடையாளத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதால் அக்குழந்தையின் நலனுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
இந்த குழந்தைக்கு 5 வயதாகியும் தந்தை பெயரை தெரிவிக்காததால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
குழந்தையின் வாரிசுதாரர் சான்றிதழுக்கு மனுதாரர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய சான்றிதழை வழங்க வேண்டும். குழந்தையின் தந்தை பெயர் அல்லது விவரங்களை கேட்டு வலியுறுத்தக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications