திருமணத்துக்கு தயாரான எக்ஸ் காதலி.. ஆத்திரத்தில் ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை.. உபியில் பயங்கரம்
லக்னோ: தனது முன்னாள் காதலிக்கு திருமண நிச்சயம் என்று அறிந்து கொண்ட 4 குழந்தைகளுக்கு தந்தையான நபர் ஒருவர், அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காதலன் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதே மாநிலம், மாவ் மாவட்டத்தில் கோசி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இந்தப் பெண்ணுக்கு வரும் மே 27 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மே 23 ஆம் தேதி பொட்டு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக அந்தப் பெண் தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், வங்கிக்கு பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளனர். இதில், நிலைகுலைந்த அப்பெண் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண்ணின் முகம், கழுத்து மற்றும் தோள் பகுதி என 60 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசம்கார் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது மர்ம நபரில் ஒருவர், நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்காமல் செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டியதாக போலீஸாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீஸ் விசாரணையில் இச்சம்பவத்தில் அப்பெண்ணின் முன்னாள் காதலர் ராம் ஜனம் சிங் பட்டேல் என்பவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ராம் ஜனம் சிங் பட்டேலுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. ஆனால், ராம் ஜனம் சட்ட விரோதமாக இந்த இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேறொரு நபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படவுள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த ராம் ஜனம் இந்த கொடூர ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். ராம் ஜனம் மற்றும் மனோஜ் யாதவ், சுரேந்திரா யாதவ் ஆகிய மூன்று பேர் ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications