ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை – ”ஸ்னாப்டீல்” சி.இ.ஓ மீது வழக்குப்பதிவு
மும்பை: அரசிடம் உரிய அனுமதி பெறாமல் ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்ற ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குனால் பல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
இணையவழி வர்த்தகமான ஆன்லைன் டிரேடிங்கில் கொடிகட்டி பறக்கும் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உரிய அங்கீகாரம் பெற்ற மருந்து கடைக்காரர்கள் மட்டுமே விற்க முடியும் என்ற விதிமுறை உள்ளது.
இந்த விதிமுறையை மதிக்காமல் சில நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடி விலையில் ஆன்லைன் மூலம் மருந்து மாத்திரைகளை விற்று வருவதாகவும், ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான ஸ்னாப்டீல் நிறுவனமும் இதற்கென தனி பட்டியலை வெளியிட்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் மருந்து மாத்திரைகளை டெலிவரி செய்துவருவதாகவும் மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, மும்பையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவககத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி ரெய்டு நடத்திய அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
யார் யாரிடம் இருந்து அந்நிறுவனம் கொள்முதல் செய்கின்றது? அதற்கான ரசீதுகளின் விபரம். ஆன்லைன் மூலமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திவந்த வாடிக்கையாளர்களின் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்ற ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குனால் பல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications