"பிறந்த உடன் என்னை கொல்ல சொன்னார்கள்"- பெண் அமைச்சர் திடுக் தகவல்
டெல்லி: நான் பிறந்தபோது, பெண் குழந்தை குடும்பத்துக்கு பாரம் என்று கூறி என்னை கொல்லுமாறு எனது தாய்க்கு சிலர் அறிவுரை கூறினர் என்று மத்திய மனித வள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இந்தி நடிகையும், மத்திய மனித வள அமைச்சருமான ஸ்மிருதி இரானி கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். அப்போது மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து இரானி கூறிய பதில்கள் இவைதான்:

நான் பிறந்தபோது, எனது தாயிடம் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள், என்னை கொன்றுவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். பெண் குழந்தை குடும்பத்துக்கு பாரம் என்பதால் அதை வளர்க்க வேண்டாம் என்று தாயிடம் கூறியுள்ளனர். ஆனால் எனது தாய் தைரியசாலி. எனது குழந்தையை வளர்க்க எனக்கு தெரியும் என்று கூறி என்னை வளர்த்தார். இதன் காரணமாகவே உங்கள் முன்னால் நான் இப்படி அமைச்சராக நிற்க முடிகிறது.
பெண் சிசு கொலையை கட்டுப்படுத்துவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். ஒரு பெண் கல்வி பயின்றால் அது அவளோடு நிற்காது. அந்த குடும்பத்துக்கே அறிவு கிடைக்கும். இதன் மூலம், நாடு விரைவில் வளர்ச்சியடையும். வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிக்க, ஏட்டுக் கல்வியுடன், நடைமுறைக்கு தேவைப்படும் கல்வியையும் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
வறுமையை கண்டு மாணவ, மாணவிகள் பயந்துவிடாதீர்கள். நமது பெற்றோர் அதிக கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவில்லையே என்று யாரும் மனம் தளர்ந்துவிடாதீர்கள். நானும்கூட நடுத்தர குடும்பத்தில் பிறந்துதான் இப்போது அமைச்சராகியுள்ளேன். நமது பிரதமர் நரேந்திரமோடி சிறு வயதில் டீ விற்பனை செய்து வாழ்க்கை நடத்தியவர். திறமையான மாணாக்கர்களுக்கு அரசே கல்வி உதவித்தொகை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications