ஜனநாயகத்திருவிழாவில் பங்கேற்று அனைவரும் வாக்களிக்களியுங்கள்: மோடி வேண்டுகோள் #TNVotes
டெல்லி: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், அனைவரும் சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 100 சதவிகித வாக்குப்பதிவிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழகம், கேரளா, புதுச்சேரி வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Urging all voters in Tamil Nadu, Kerala and Puducherry to vote in record numbers today & be a part of this festival of democracy.
— Narendra Modi (@narendramodi) May 16, 2016
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, இன்று நடைபெறும் தேர்தலில் தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் சாதனை ஏற்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும். அனைவரும் இந்த ஜனநாயத திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications