ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் கார்த்திகேயன் பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விருது
புவனேஸ்வர்: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் வி. கார்த்திகேயன் பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) பிரசிடென்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் முதல்வரின் தனிச் செயலாளராக பதவி வகித்து, பணித் திறமைக்காக பல்வேறு பாராட்டு பெற்று வரும் கார்த்திகேயன் பாண்டியன், விளையாட்டிலும் திறமை மிக்கவர்.
மதுரையில் பிறந்த கார்த்திகேயன் பாண்டியன், நெய்வேலியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். மதுரையில் உள்ள விவசாய கல்லூரியில், பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்த இவர், டெல்லியிலுள்ள, புகழ் பெற்ற, இந்திய விவசாய ஆராய்ச்சி இன்ஸ்ட்டிடியூட்டில், முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். இதன்பிறகு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தையங்களில் பல்கலைக்கழக சாம்பியனாக இருந்தவர், கார்த்திகேயன் பாண்டியன்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வழங்கியுள்ள விருது குறித்து, கார்த்திகேயன் பாண்டியன் கருத்து தெரிவிக்கையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு எப்போதும் விளையாட்டு மீது விருப்பம் உண்டு. என்னுடைய டீம்தான், இதை சாத்தியமாக்கியது. இந்த விருது இந்திய விளையாட்டுகளுக்கு அதிக பங்களிப்பு செய்ய என்னை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். 2018ம் ஆண்டில் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்காக நாங்கள் செய்த உழைப்புக்கான பரிசுதான் இந்த விருது என்று நான் நம்புகிறேன். நிச்சயமாக, எங்கள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஊக்கம் இல்லாமல், இந்த விருது சாத்தியமில்லை " என்று கார்த்திகேயன் பாண்டியன் கூறினார்.
இவர், முதல்வரின் மாற்றம் மற்றும் முயற்சிகள் (5Tகள்) திட்டத்தின் செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் துறைக்கு ஒடிசா அரசுதான் முழு ஊக்கம் தருகிறது என பெருமிதம் தெரிவிக்கும் கார்த்திகேயன் பாண்டியன், நாட்டிலேயே ஒடிசாவில் மட்டுமே, பளு தூக்குதல், தடகளம், பேட்மின்டன், நீச்சல் மற்றும் ஹாக்கி ஆகியவற்றுக்கான உயர் செயல்திறன் மையம் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
ஃபிட்னஸில் ரொம்பவே கவனம் செலுத்துபவர், கார்த்திகேயன் பாண்டியன். அதிகாலை 4 மணிக்கே எழுந்திருக்கும் வழக்கம் கொண்டவர். "கார்த்திகேயன் பாண்டியனின், ஒழுக்கம், கடின உழைப்பு, கொள்கையில் தெளிவு, இறுதிவரை போராடும் குணம் ஆகியவை, விளையாட்டுத் துறையில், ஒடிசாவை, புதிய உயரங்களுக்கு கொண்டு செல்கிறது" என்கிறார்கள், முதல்வர் அலுவலக வட்டாரத்தில்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications