ரோகித் சேகர் என் மகன் தான்- வேறவழியே இல்லாமல் ஒப்புக் கொண்ட என்.டி திவாரி!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி வேறுவழியே இல்லாமல் 'ரோகித் சேகர்' என் மகன்தான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி. இவருக்கு வயது 89. உத்தரபிரதேச முதல்வராக, மத்திய அமைச்சராக பதவி வகித்த இவர் ஆந்திர ஆளுநராகவும் பதவி வகித்தார். அப்போது திவாரி மீது பாலியல் புகார் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் பதவி விலகினார்.
இந்நிலையில் ரோகித் சேகர் என்பவர் என்.டி.திவாரி மீது கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். என்.டி.திவாரி தான் தனது தந்தை என்று கூறிய அவர் வாரிசு உரிமை கோரினார். இதில் உண்மையை கண்டுபிடிக்க என்.டி. திவாரிக்கு மரபணு சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

மரபணு சோதனையில் சேகரின் மரபணு ரீதியான தந்தை என்.டி.திவாரி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. சோதனைக்கூட பரிசோதனைகள் எல்லாம் சரியானவை அல்ல. இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் அடம் பிடித்தார் திவாரி.
இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் என். டி திவாரி, ரோகித் சேகர் என்மகன் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மரபணு சோதனை கூட அவர் என்னுடைய மரபணுரீதியான மகன் என்று உறுதி செய்துள்ளது என்றார். முன்னதாக ரோகித் சர்மாவை தனது இல்லத்திற்கு அழைத்த என்.டி.திவாரி அழைத்து பேசினார்.
இந்த போராட்டத்தில் நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். நான் இந்த குடும்பத்தில் இணைவதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் என்.டி.திவாரி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
-
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications