மகனுக்கு விந்தணு குறைபாடு.. மருமகளை கர்ப்பமாக்க உறவினருடன் சேர்ந்து மாமனார் பலாத்காரம்! குஜராத் ஷாக்
காந்தி நகர்: மகனின் விந்தணு குறைபாடு காரணமாக மருமகளை கர்ப்பிணியாக்க உறவினர்களுடன் சேர்ந்து மாமனார் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் நவபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவருக்கும், இன்னொருவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

திருமணம் ஆகி சில மாதங்கள் ஆனபோதும் அந்த பெண் கர்ப்பிணியாகவில்லை. இதனால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். முதலில் குடும்பத்தினருக்கு பெண்ணின் மீது சந்தேகம் எழுந்தது.
குழந்தை பிறப்பதில் சிக்கல்
39 வயதில் அந்த பெண் திருமணம் செய்தார். தாமதமான திருமணம் மற்றும் வயது அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் அவரால் கர்ப்பமடைய முடியவில்லை என்று நினைத்தனர். இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் மேற்கொள்ள அனுப்பினர்.
அப்போது அந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கணவருக்கு விந்தணு குறைபாடு
அதேவேளையில் அவரது கணவருக்கு தான் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. விந்தணு குறைபாட்டால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதும், இதனால் அவர் அந்த பெண் கர்ப்பிணியாகவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனையின்படி அந்த பெண் ஐவிஎஃப் முறையில் கருத்தரிப்புக்கு தயாரானார். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. மேலும் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அந்த பெண் மறுத்துவிட்டார். அதோடு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று அவர் கூறினார்.
பலாத்காரம் செய்த மாமனார்
ஆனால் அவரது மாமனார் ஏற்கவில்லை. எப்படியாவது மருமகள் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் கூறி வந்துள்ளார். கடந்த 2024 ஜூலை மாதம் வீட்டில் அந்த பெண் தூங்கி கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த மாமனார் பலாத்காரம் செய்ய முயன்றார். கண்விழித்த பெண் கூச்சலிடவே அவரை தாக்கியும், கொலை செய்வதாக மிரட்டியும் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் மனவேதனை அடைந்த பெண் சம்பவம் பற்றி தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கண்டுக்கெள்ளவில்லை. எங்கள் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும். இதனால் யாரிடமும் இந்த சம்பவம் பற்றி கூறக்கூடாது. மீறினால் ஆடைகள் இன்றி இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
பலாத்காரம் செய்த உறவினர்
இதனை பயன்படுத்தி அந்த பெண்ணை மாமானார் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அந்த பெண் கர்ப்பமாகவில்லை. இதையடுத்து தனது உறவினர் ஒருவரை அழைத்து கடந்த 2024 டிசம்பம் மாதம் பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர். அதன்பிறகு அவரும் அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அந்த பெண் கர்ப்பமானார். ஆனால் இந்த மாத தொடக்கத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்தது.
இந்நிலையில் தான் மீண்டும் அவர்கள் பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் சம்பவம் குறித்து நவபுரா போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமனார், உறவினர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications