திருப்பதி மலைப்பாதையில் ஓடும் வேனில் திடீர் தீ: 12 பக்தர்கள் உயிர் தப்பினர்
திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் நேற்றிரவு வேன் ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக 12 பக்தர்கள் உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியிலிருந்து நேற்று இரவு திருமலைக்கு ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வேனில் 12 பக்தர்கள் இருந்தனர்.

திவ்யராமன் என்ற இடத்தின் அருகே வரும்போது அந்த வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனை டிரைவர் நிறுத்தினார். இதனையடுத்து வேனில் வந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி தப்பித்தனர்.
அதற்குள் மலைப்பாதையில் இருந்த தேவஸ்தான பாதுகாப்பு சிப்பந்திகள் அது குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வேனில் எரிந்த தீயை அணைத்து விபத்தை தவிர்த்தனர்.
பின்னர் அதில் வந்த 12 பக்தர்களும் வேறு வாகனத்தில் திருமலைக்கு வந்து சேர்ந்தனர். வேனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications