டெல்லியில் மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவனில் தீ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் மத்திய அமைச்சர்கள் சிலரின் அலுவலகங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தின் 7வது மாடியில் இன்று காலை 9.40 மணிக்கு திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டதால் 7வது மாடியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications