ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: 259 சாட்சிகளின் வாக்குமூலங்களை தொகுத்து வாதிட்ட பவானிசிங்
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வக்கீல் இறுதி வாதத்தை இன்று தொகுந்து வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14 நாட்களாக அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.

15ம் நாளான இன்று 259 சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படியாக வைத்து இறுதி வாதம் நடைபெற்றது. 14 நாட்கள் நடத்திய இறுதி வாதங்களை தொகுத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் முன் வைத்தார்.
சுப்ரமணிசுவாமி
சுப்ரமணியசுவாமி அளித்த சாட்சியத்தை மேற்கோள் காட்டி நேற்று முன்தினம் வாதிட்ட பவானி சிங், ஜெயலலிதாவுக்கு எதிராக சில ஆதாரங்களை திரட்டி 1996ம் ஆண்டில் சுப்ரமணியசாமி புகார் அளித்தார்.
மாதம் ரூ.1 ஊதியம் பெற்ற ஜெயலலிதா, அதிகமான சொத்துகளை வாங்கிக் குவித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். சென்னையை அடுத்த சிறுதாவூரில் 1996ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் 18.6 ஏக்கர் நிலம் வாங்கினர்.
மேலும் சிறுதாவூர் பட்டா நிலம் அருகே புறம்போக்கு நிலம் 100 ஏக்கர் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, செங்கை வட்டாட்சியர் சிறுதாவூர் ஆக்கிரமிப்பு பற்றி சுப்ரமணியசுவாமி தந்த சாட்சி பற்றியும் பவானி சிங் விளக்கம் தந்தார்.
லத்திகா சரண்
மேலும் ஐ.பி.எஸ் அதிகாரி லத்திகா சரண் தமது சாட்சியத்தில் கூறிய தகவல் பற்றியும் பவானி சிங் வாதிட்டார். மேலும் அதிகாரத்தை பயன்படுத்தி ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற பெயரில் ரூ.50 லட்சம் பெற்றுள்ளனர் என தகவல் தெரிகிறது.
பவானிசிங் தனது இறுதி வாதத்தின் தொகுப்பை நாளையும் தொடர உள்ளார்.
இதனிடையே வரும் 15-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் வாதத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யவும், 19-ம் தேதி ஜெயலலிதா தரப்பு சாட்சியங்களின் வாதங்களைத் தொடங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications