30 வருஷத்தில் முதல் முறை.. அயோத்தியில் ராமர் கோயிலுக்கு கல் செதுக்கும் பணியை நிறுத்தியது விஹெச்பி
Recommended Video
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கல் செதுக்கும் பணியினை 30 ஆண்டுகளில் முதல் முறையாக விஸ்வ இந்து பரிஷத் நிறுத்தி உள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து கோயில் கட்டுவதற்கான பணிகளை நிறுத்தி உள்ளது அந்த அமைப்பு.
அயோத்தியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, கரசேவகர்களால் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த இடம் கடவுள் ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. இதேபோல் இந்த இடம் தங்களுக்கே சொந்தம் என்று முஸ்லிம் அமைப்புகளும் கூறி வருகின்றன.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது குறித்த தீர்ப்பினை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணி நிறுத்தம்
இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து 30 ஆண்டுகளில் முதல்முறையாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயிலுக்கான கல் செதுக்கும் பணியினை நிறுத்தி உள்ளது.

விஷ்வ இந்து பரிஷத்
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்த 1990ம் ஆண்டு முதல் அயோத்தியில் ராமர் கோயிலுக்காக கல் செதுக்கும் பணியினை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

பணி நிறுத்தப்படவில்லை
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் 6 மாதம் தடை செய்யப்பட்டது. அப்போது கூட ராமர் கோயிலுக்கான கல் செதுக்கும் பணி நிறுத்தப்படவில்லை.

பணிகள் நிறுத்தம்
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து முதல்முறையாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயிலுக்கான கல் செதுக்கும் பணியினை நிறுத்தி உள்ளது. விஹெச்பி செய்தி தொடர்பாளர் சரத் சர்மா இதுபற்றி கூறுகையில், உயர்மட்ட தலைவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்செதுக்கும் பணியினை மேற்கொண்டு வந்த கைவினை கலைஞர்களை பணியினை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அனுப்பிவிட்டோம். ராம்ஜென்பூமி நியாஸ் கல்செதுக்கும் பணியினை எப்போது மீண்டும் தொடர்வது என்பது குறித்து முடிவு செய்வார் என்றார்.

1.75 லட்சம் கற்கள் தேவை
இதனிடையே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை 1.25 லட்சம் கற்களை அந்த அமைப்பு செதுக்கி உள்ளது. இது கீழ்தளம் வரை சரியாக இருக்கும் என்றும் மேல்தளம் மற்றும் முழுமையாக கட்டி முடிக்க 1.75 லட்சம் கற்கள் தேவை என்றும் விஹெச்பி அமைப்பு கூறியுள்ளது.

மத ஒற்றுமை
இதனிடையே விஹெச்பி செய்தி தொடர்பாளர் சரத் சர்மா அயோத்தி தீர்ப்பு குறித்து கூறுகையில், தீர்ப்பு இந்துகளுக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ யாருக்கு சாதகமாக வந்தாலும் இருவரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கவேண்டும். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் நல்லுறவில் உறவை கெடுக்கும் எந்தவொரு சம்பவமும் நடக்கக்கூடாது என்பதை நாம் அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications