வறட்சியின் பிடியில் தவிக்கும் மகாராஷ்டிராவின் லத்தூருக்கு ராஜஸ்தானிலிருந்து ரயிலில் போன குடிநீர்!
லத்தூர்: மகாராஷ்டிராவில் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லத்தூர் பகுதிக்கு, மிராஜ் பகுதியில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது.
இதற்காக 10 ரயில் பெட்டிகள் தூய்மைப்படுத்தப்பட்டு அவற்றில் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியிலிருந்து நீர் நிரப்பட்டு மிராஜ் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து லத்தூர் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு பெட்டிகளும் 54,000 லிட்டர் அளவிற்கு தண்ணீர் நிரப்பட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் நேற்று மாலை லத்தூர் சென்றடைந்தது. வரலாறு காணாத வறட்சியில் சிக்கியுள்ள மகாராஷ்டிர மாநிலத்திற்கு ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

மீரஜ் நகரிலிருந்து:
ராஜஸ்தானின் கோடா நகரிலிருந்து 5 லட்சம் லிட்டர் தண்ணீரை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயில், மகாராஷ்டிராவின் மீரஜ் நகருக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து 10 வேகன் தண்ணீர் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் லத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாள்தோறும் இயக்கப்படும்:
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் 50 வேகன்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் , சரக்கு ரயில் ராஜஸ்தானிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் தண்ணீர்ப் பஞ்சம்:
ரயில் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் முறையாக சேமிக்கப்படும் என்றனர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு லத்தூர் மாவட்டம் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது.

வீழ்ச்சியடைந்த உணவு உற்பத்தி:
அதிகளவில் விவசாயம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. பெரும்பாலான அணைகள் வறண்டு காணப்படுவதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவு தானிய உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications