தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தேவை- மோடியிடம் அதிமுக எம்.பிக்கள் மனு
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி அதிமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் மீது நள்ளிரவு, இலங்கை கடற்படையினர் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து நாகை, காரைக்கால் மீனவர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
மக்களவை துணை சபாநாயகர் மற்றும் அதிமுக நாடாளுமன்ற தலைவர் வேணுகோபால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு #FishermanIssue #ADMK MPs Meet PM pic.twitter.com/3a4XeGBj8s
— Stephen (@SteveNews1) November 18, 2016
இதுபற்றி நாகை, காரைக்கால் கடலோர காவல் படையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கடலில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற படகு மீனவர்களும் அச்சத்தில் கரை திரும்பினர். பல ஆண்டுகளுக்கு பின் இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மீனவர் பிரச்சினை தொடர்பாகவும், கச்சத்தீவை மீட்கவும் பிரதமர் மோடியிடம் அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலேயே பிரதமரை சந்தித்து மனு அளித்ததாக அதிமுக எம்.பி., தம்பித்துரை கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications