டெல்லியில் 30 வயது பெண் 5 பேரால் கூட்டு பலாத்காரம்.. வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி அட்டூழியம்
டெல்லியில் 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பீபிஒ ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பீபிஒ ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தெற்கு டெல்லி முனிர்கா பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்தப் பெண்ணை அவரது ஆண் நண்பர் விகாஸ் டெல்லி பாண்டவ் நகர் பகுதியில் தனது நண்பர்கள் கொடுக்கும் பார்ட்டிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனை நம்பி அந்தப்பெண்ணும் தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது வழியில் தனது இரண்டு நண்பர்களை சந்தித்த விகாஸ் அவர்களையும் அழைத்துக்கொண்டு பார்ட்டி நடக்கும் தனது நண்பர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

5 பேரிடம் விட்டு சென்ற ஆண் நண்பர்
அங்கு ஏற்கனவே இருந்த தனது 3 நண்பர்களையும் அந்தப்பெண்ணுக்கு அறிமுகப்படுத்தி வைத்த விகாஸ் தனக்கு வேலையிருப்பதாகவும் சற்று நேரத்தில் வந்து அழைத்து செல்வதாகவும் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை எனத் தெரிகிறது.

வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றினர்
இதையடுத்து அவரது வாயில் 5 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளனர். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை 5 பேரம் பலாத்காரம் செய்துள்ளனர்.

பால்கனியில் இருந்து குதித்த பெண்
கூச்சலிட்டாலோ அல்லது இங்கிருந்து தப்ப முயன்றாலோ கொன்றுவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து காலை 5.30 மணியளவில் அவர்களிடம் இருந்து தப்பித்து முதல் மாடியின் பால்கனிக்கு சென்ற அந்தப் பெண் அங்கிருந்து குதித்துள்ளார்.

போலீசாருக்கு தகவல்
இதில் கால்களில் காயமடைந்த அவர் அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

5 பேரும் கைது
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லக்ஷயா,விகாஸ் குமார், நவீன், ஸ்வரித், ப்ரதீக் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 5 பேரும் டெல்லியில் உள்ள ஒரு பீபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications