போர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய பெண்கள்
டெல்லி: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 5 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை உலக பெரும் பணக்காரர்கள்(பில்லியனர்கள்) பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 5 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

பணக்காரர்கள்
போர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 1, 810 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் 190 பேர் பெண்கள். கடந்த 2015ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 197 பெண்கள் இடம் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவித்ரி ஜிந்தால்
ஜிந்தால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிந்தால் போர்ப்ஸ் பட்டியலில் 453வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி. கடந்த 5 ஆண்டுகளில் சாவித்ரியின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்து ஜெயின்
பென்னட் கோல்மேன் அன்ட் கம்பெனியின் தலைவர் இந்து ஜெயின் போர்ப்ஸ் பட்டியலில் 549வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி.

கோத்ரேஜ்
கோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்த ஸ்மிதா கிருஷ்ணா கோத்ரேஜ் போர்ப்ஸ் பட்டியலில் 810வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி. அவர் தற்போது தான் முதல் முறையாக உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

லீனா திவாரி
சக்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவைக்கு மருந்து தயாரிக்கும் யுஎஸ்வி நிறுவன தலைவர் லீனா திவாரி போர்ப்ஸ் பட்டியலில் 1067வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி. லீனா முதன்முதலாக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ஹேவல்ஸ்
ஹேவல்ஸ் இந்தியா குழும தலைவர் வினோத் குப்தா ரூ.7 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் போர்ப்ஸ் பட்டியலில் 1,577வது இடத்தில் உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications