மும்பை அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது - 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை அருகே தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியானார்கள்.
அந்த ஹெலிகாப்டர் உயர் அழுத்த மின் வயரில் உரசியதால் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து எரிந்து போனது.
தானே ஊரகப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து தானே ஊரக எஸ்.பி. அனில் கும்பரே கூறுகையில், இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பேரும் இறந்து விட்டனர்.
இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. முர்பாத் தாலுகா, டோக்வடே கிராமத்தில் விபத்து நேரிட்டது என்றார்.
இந்த ஹெலிகாப்டர் இன்று காலை ஜூஹு விமான நிலையத்திலிருந்து நாக்பூர் கிளம்பியது. வழியில் ஔரங்காபாத்தில் எரிபொருள் நிரப்பத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வழியிலேயே விபத்துக்குள்ளாகி விட்டது.












Click it and Unblock the Notifications