ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் வெறியாட்டம்.. மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு.. 5 போலீஸ்காரர்கள் பலி
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாஷெட்பூர் அருகே மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 போலீசார் கொல்லப்பட்டனர்.
தலைநகர், ஜாம்ஷெட்பூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில், சரைகெலா மாவட்டத்தில் ஒரு உள்ளூர் சந்தையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது திடீரென மாவோயிஸ்டுகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

மாவோயிஸ்டுகள், இரண்டு பேர் இருந்ததாகவும், தாக்குதலுக்கு பிறகு போலீசாரின் ஆயுதங்களை கொள்ளையடித்து தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற இடம் மேற்கு வங்காளம்-ஜார்கண்ட் எல்லைக்கு அருகே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில், ஜார்கண்டின் தும்கா மாவட்டத்தில், தல்தங்கல் வனப்பகுதியில், சஸ்ஸாத்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி) மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர்.
மே 28 ம் தேதி, ஜார்கண்டின் சரைகெலாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒரு சிஆர்பிஎஃப் கமாண்டோ இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications