For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 தமிழர்களும் நீரில் மூழ்கிதான் இறந்தனர், அடித்ததற்கான தடயங்கள் இல்லை.. மருத்துவர் விளக்கம்

கடப்பா ஏரியில் மூழ்கிதான் ஐந்து தமிழர்களும் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செம்மரக்கடத்தல் பெயரில் தமிழர்களை கொன்று குவிக்கும் ஆந்திர அரசு- வீடியோ

    கடப்பா: 5 தமிழர்களும் ஏரியில் மூழ்கிதான் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர போலீசாரே அடித்துக்கொன்று 5 பேரின் உடல்களையும் ஏரியில் வீசியதாக தமிழ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    உடல்கள் பிரேத பரிசோதனை

    உடல்கள் பிரேத பரிசோதனை

    இந்நிலையில் 5 பேரின் உடல்களும் ஆந்திர மாநிலம் கடப்பா அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

    நீரில் மூழ்கிதான் இறந்தனர்

    நீரில் மூழ்கிதான் இறந்தனர்

    அப்போது 5 பேரும் நீரில் மூழ்கிதான் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். மேலும் 5 பேரின் உடலிலும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

    எந்த தடயமும் இல்லை

    எந்த தடயமும் இல்லை

    3 நாட்கள் நீரில் மூழ்கியிருந்ததால் உடல்கள் அழுகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அடித்து துன்புறுத்தியதற்கான எந்த தடயங்களும் 5 பேரின் உடல்களிலும் இல்லை என்றும் மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

    சேலத்தை சேர்ந்தவர்கள்

    சேலத்தை சேர்ந்தவர்கள்

    இந்நிலையில் உயிரிழந்த 5 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் அடியனூரைச் சேர்ந்த முருகேசன், கீழ்ஆவாரை கருப்பணன் உடல்கள் என உறுதிப்படுத்தப்பட்டன, மேலும் ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் ஆகிய மூன்று பேரும் கருமந்துறையை சேர்ந்தவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Five Tamils were dead in the lake, Andhra government doctor Anand Kumar said. There is no symptoms of beaten doctors said
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X