பெரும் சோகம்.. உலகை உறைய வைத்த நேபாள விமான விபத்து! இந்தியர்கள் உட்பட 68 பேரும் உயிரிழப்பு
காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் வந்த விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதில் பயணித்த 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருப்பது பலரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அமைந்து உள்ளது போக்கரா சர்வதேச விமான நிலையம். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள், 4 விமான பணியாளர்களுடன் போக்கரா விமான நிலையத்துக்கு எட்டி ஏர்லைன்ஸ் புறப்பட்டது.
விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி சென்று ஓடி ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆற்றின் பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்கு உள்ளானது.

68 பேரும் பலி
இந்த விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. முதலில் 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 45 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்தது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்ட நிலையில், தற்போது 68 பயணிகளும் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5 இந்தியர்கள்
இந்த நிலையில் விமானத்தில் சென்ற 68 பயணிகளில் 53 பேர் நேபாளம் நாட்டின் குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் 5 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் ரஷிய குடிமக்கள் எனவும், 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் தலா ஒருவர் இதில் பயணித்ததாக போக்கரா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள். குறிப்பாக இதில் 2 குழந்தைகளும் அடக்கம்.

மீட்புக்குழுவினர்
நேபாளம் சிவில் விமான போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா இதுகுறித்து பேசுகையில், "விபத்து நடத்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் சென்று உள்ளார்கள். விபத்து தொடர்பாக கூடுதல் விபரங்களை சேகரித்து வருகிறோம். மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன." என்று தெரிவித்தார்.

நேபாள பிரதமர் பிரசண்டா
விபத்து குறித்து தகவலறிந்தவுடன் நேபாளம் பிரதமர் பிரசண்டா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பொக்கரா விரையும் அவர், விபத்து நடந்த விமான நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு உள்ளார். விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து போக்கரா விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

விபத்துக்கான காரணம்?
இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் நேபாளத்தில் அடர்ந்து பனி மூட்டம் நிலவியது விபத்துக்கு காரணமாக பார்க்கப்பட்டது. புகை மூட்டம் எழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தவுடன் இதற்கான உண்மை காரணம் தெரியவரும்.

மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள்
இதுகுறித்து நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி தெரிவிக்கையில், "விமான நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் செட்டி என்ற ஆற்று பள்ளத்தாக்கில் விமானம் விபத்து உள்ளானது. 200 ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்ட ரேஞ்சர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்." என்றார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications