வட மாநிலங்களில் கனமழை... கங்கையில் வெள்ளம்.. வெள்ளத்தில் மிதக்கும் ஆயிரம் கிராமங்கள்!
பாட்னா: வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கங்கை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைகளை உடைத்துக் கொண்டு கிராமப் பகுதிகளில் புகுந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஓடும் கங்கை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்வதால், பல இடங்களில் கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், 12 மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் வழங்கி வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநில துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் தமது தந்தையான லாலு பிரசாத்துடன் வெள்ளம் பாதித்த இடங்களை வான்வழியாக ஆய்வு செய்தார்.

உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரகாண்ட் மாநிலத்திலும் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் பல லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலங்களில், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications