ஆற்று வெள்ளத்தில் சிக்கி உடைந்த மகாராஷ்டிர பாலம் வெள்ளையர்களால் கட்டப்பட்டது!

Subscribe to Oneindia Tamil

மும்பை :மகாராஷ்டிரா மாநிலம் சாவித்ரி ஆற்றின் இடையே பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், 2 பேருந்துகளில் சென்ற 22 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாலம் வெள்ளையர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்ட பழைய பாலமாகும்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் ராய்கட் மாவட்டத்தில் சாவித்திரி ஆற்றின் இடையே உள்ள பாலம் ஒன்று நேற்றிரவு சுமார் 11:30 மணியளவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பாலமானது ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்டதாகும். சம்பவத்தின் போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் உள்பட பல வாகனங்கள் ஆற்று வெள்ளத்தில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். இதையடுத்து சுமார் 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 3 குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கனமழை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரங்களைக் கேட்டறிந்தார். மீட்பு மற்றும் தேடுதல் பணியில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

இதுவரை வாகனங்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் மீட்கப்படவில்லை. அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது குறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவிட்டுள்ளதாவது: பாலம் உடைந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பேசினேன். அப்பகுதியில் இரண்டு பாலங்கள் உள்ளன. அதில் ஒன்று புதியது மற்றொன்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் உடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+