பீகார், உ.பி, அசாமை சூழ்ந்த மழை வெள்ளம் - இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு - 500 பேர் பலி
பீகார், உத்தரபிரதேசம், அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பாட்னா: பீகார், அசாம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
பீகாரில் மட்டும் 367 பேர் பலியாகியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் மழை வெள்ளத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்திலும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.

உத்தரபிரதேசத்தில் வெள்ளம்
பல மாவட்டங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. 800 கிராமங்களை சேர்ந்த 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்
உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம்
மேற்கு வங்க மாநிலமும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மால்டா மாவட்டத்தில் நிலைமை இன்னும் சீராகவில்லை. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் வெள்ளம்
பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர்.

367 பேர் பலி
இதை தொடர்ந்து இந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி நாளை ஆய்வு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பீகார் வெள்ள சேதங்களை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார். இதன் பின்னர் இந்த மாநிலத்துக்கான மத்திய அரசின் நிவாரண உதவி குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications