நாளை முதல்வராக பதவியேற்கும் குமாரசாமி.. பெரும்பான்மையை எப்போது நிரூபிக்கிறார் தெரியுமா?
Recommended Video

பெங்களூர்: நாளை மதியம் 2 மணியளவில் கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள எச்.டி.குமாரசாமி, அடுத்த நாளே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளாராம்.
37 உறுப்பினர்கள் பலம் கொண்ட (குமாரசாமி 2 தொகுதிகளில் வென்றுள்ளார்) மஜத மற்றும் 78 உறுப்பினர்கள் பலம் கொண்ட காங்கிரஸ் இணைந்து கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முன் வந்துள்ளன.

குமாரசாமி நாளை பகல் 2 மணியளவில் முதல்வராக பதவியேற்கிறார். கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில், மேற்கு வங்கம் உட்பட பல மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆளுநர் 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ள போதிலும், நாளை மறுநாளே குமாரசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளாராம்.
2 துணை முதல்வர் பதவி தேவை என காங்கிரஸ் வலியுறுத்தும் நிலையில், மஜதவோ ஒரு துணை முதல்வர் பதவிக்கு ஓகே என்கிறது. இதனால் இழுபறி நீடித்த நிலையில், சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு வழங்க மஜத ஒப்புக்கொண்டுள்ளதால் பேச்சுவார்த்தைகள் எல்லாம் சுமூகமாக முடிந்துள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications