வட மாநிலங்களை வாட்டும் கடும் குளிர்... 160 பேர் பலி!
டெல்லி: வட மாநிலங்களில் குளிர் கடுமையாகி, மைனல் 17 டிகிரி வரை போய் விட்டதால், 160 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது.
கடுமையான குளிர் மற்றும் பனிக்காற்றின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர் வாட்டி வதைக்கும் காஷ்மீர் மாநிலத்தில் பனிக்காற்றும் வீசுகிறது. லே பகுதியில் நேற்று வெப்பநிலை மைனஸ் 17 டிகிரி செல்சியாக இருந்தது. கார்கில் பகுதியில் மைனஸ் 15.2 டிகிரி செல்சியசாக இருந்தது.
தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்து விட்டது. இதேபோல் மாநிலத்தில் பல இடங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விட்டது. குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை கடந்த 17-ந் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது.
டெல்லியில் நேற்று காலை 8.30 அளவில் வெப்பநிலை, 2.6 டிகிரி செல்சியசாக குறைந்தது. 50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு காலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 55 விமான சேவைகள் தாமதமாகின. வெளிநாடுகளில இருந்து டெல்லி வந்த 3 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் 70 ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து புறப்படும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 6 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த 1945-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி 1.1 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவியது. அதுதான் அங்கு இதுவரை பதிவான குறைந்த அளவு வெப்பநிலையாக இருந்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் குளிர் தாங்காமல் நேற்று ஒரு நாளில் மட்டும் 21 பேர் உயிர் இழந்தனர். இவர்களையும் சேர்த்து அந்த மாநிலத்தில் இதுவரை குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து உள்ளது. அங்கும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்திலும் வெப்ப நிலை 1 டிகிரி வரை போய்விட்டதால் மக்கள் படாத பாடு படுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications