மோடியின் பெங்களூர் மாநாட்டுக்கு 3 லட்சம் பேர் டிக்கெட் வாங்கியிருக்காங்க... பாஜக
பெங்களூர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெங்களூர் மாநாட்டுக்கு இதுவரை 3 லட்சம் பேர் டிக்கெட் வாங்கியிருப்பதாக பாஜக கூறியுள்ளது.
தலைக்கு ரூ. 10 என்று டிக்கெட் கட்டணம் நிர்ணயித்து விற்று வருகிறது. ஆன்லைன் மூலம் இந்த டிக்கெட் விற்பனை நடத்தப்படுகிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பேசவுள்ளார் மோடி.

ரூ. 20 கோடி செலவில் மாநாடு
இந்த மாநாட்டுக்காக பாஜக ரூ. 20 கோடி வரை செலவிட்டு வருவதாக பரபரப்பான பேச்சு ஏற்கனவே உலா வந்து கொண்டுள்ளது. ஆனால் அதுகுறித்து பாஜக தரப்பில் விளக்கம் ஏதும் இல்லை.

சோனியா கூட்டத்துக்கு இதை விட செலவு பண்றாங்க
இதுகுறித்து கர்நாடக பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வத் நாராயன் கூறுகையில், மாண்டியாவில் சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்திற்கு எங்களைக் காட்டிலும் அதிக அளவில் செலவிட்டது காங்கிரஸ். அதுகுறித்து யாரும் பேசுவதில்லை.

நகை கொடுக்கும் திட்டம் இல்லை
மோடியின் பெங்களூர் கூட்டத்தின்போது மோடிக்கு தங்க நகையைப் பரிசாக அளிக்கப் போவதாக வரும் செய்திகளுக்குப் பதிலளிக்க முடியாது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றார்.

அரண்மனை மைதானத்தில்
பெங்களூர் அரண்மனை மைதானத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மிகப் பெரிய மைதானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ருசியான சாப்பாடு ரெடி
இந்த மாநாட்டுக்கு வருவோருக்காக ருசியான சாப்பாடும் தரப் போகிறார்கள். இது சைவச் சாப்பாடு. இதற்காக ஆறு கவுண்டர்களையும் திறக்கின்றனர்.

கடைசியாக ஏப்ரலில் விசிட்
கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகம் வந்திருந்தார் மோடி. மங்களூர், பெங்களூரில் அவர் பேசினார்.
அப்போது அவர் மீண்டும் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்திருந்தார்.. கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழந்திருந்தது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications