ஒரு வாரத்தில் 4 பேரைக் கொன்ற புலியை மடக்கிப் பிடித்த வனத்துறை
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் 4 பேரை தாக்கிக் கொன்ற புலியை வனத்துறையினர் இன்று உயிருடன் பிடித்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹெச்.டி. கோட்டே தாலுகாவில் உள்ளது சிக்கபர்கி காடுகள். இந்த காட்டுப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம். இந்நிலையில் புலி தாக்கி 2 பேர் பலியாகினர். மேலும் கடந்த சனிக்கிழமை நாகர்ஹோலே காட்டுப்பகுதியில் ஒருவர் புலி தாக்கி உயிர் இழந்தார்.
இந்நிலையில் பசப்பா(55) என்ற விவசாயி புலி தாக்கி நேற்று முன்தினம் மாலை பலியானார். பசப்பாவை கொன்ற புலி தான் சீகேவடி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான செலுவா மற்றும் நதாதிஹாடியைச் சேர்ந்த பசவராஜ் ஆகியோரையும் கொன்றது என்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த புலியை கண்டதும் சுட்டுக் கொல்ல கர்நாடக மாநில வனத் துறை அமைச்சர் ராமநாத் ராய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் 4 மனித உயிர்களை பறித்த அந்த புலி இன்று சிக்கபர்கி காட்டுப் பகுதிக்கு வந்தது. அதை பார்த்த வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்கம் ஊசி செலுத்தி புலியை பிடித்தனர்.
பிடிபட்ட புலி பன்னேர்கட்டா தேசிய விலங்கியல் பூங்காவில் விடப்பட உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications