பெங்களூருவில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கழுத்து நெரித்து கொலை
பெங்களூரு: ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் புறநகரான உஸ்கூர் பகுதியில் உள்ள ஒரு வில்லா குடியிருப்பில் வசித்தவர் 70 வயதான பர்வேஸ் கோகர். இவர் இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரியாகும்.
நேற்று முன்தினம் இரவு, பர்வேஸ் ஒரு படுக்கையறையிலும், அவரது மனைவி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். நேற்று காலையில் பர்வேசின் மனைவி எழுந்து பார்த்தபோது, பர்வேஸ் அறை கதவு பூட்டப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. கதவை தட்டிப் பார்த்தும் பதில் வராததால் சந்தேகமடைந்த அவர், பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பர்வேஸ் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பரிசீலனை நடத்தினர். கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். கழுத்தை நெரித்து கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
பூட்டிய வீட்டுக்குள் எப்படி கொலையாளிகள் வந்தனர், எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து மர்மம் நீடிக்கிறது.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications