சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சிக்கிய அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
குவஹாத்தி: நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் விசாரிக்கப்பட்ட அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி சங்கர் பரூவா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை மோசடி செய்து பல்லாயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் மிகப் பெரும் அரசியல் பிரபலங்கள், காவல்துறை அதிகாரிகள் சிக்கினர்.
கடந்த மாதம் 29-ந் தேதி அதிரடியாக 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அஸ்ஸாம் மாநில டிஜிபி சங்கர் பரூவாவின் வீடும் அலுவலகமும் அடங்கும்.
இந்த நிலையில் இன்று திடீரென சங்கர் பரூவா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications