இஸ்ரோ உளவு விவகாரம்- மோடிக்கு எதிராக குஜராத் முன்னாள் டிஜிபி அவதூறு வழக்கு
டெல்லி: இஸ்ரோ உளவு விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அம் மாநில முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.குமார், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இஸ்ரோ உளவு வழக்கு விவகாரத்தில் தம்மை தொடர்புபடுத்தி மோடியும் பாஜக தலைவர்களும் அவதூறாகப் பேசுவதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ உளவு வழக்கில் நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பாஜக தலைவர்கள் இஸ்ரோ உளவு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி, இஸ்ரோ உளவு வழக்கில் சிக்கிய விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
நான் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்று கூறி நம்பி நாராயணனும் மீனாட்சியும் பழிசுமத்துகின்றனர். மோடியும் ராஜ்நாத் சிங்கும் என்னைப்பற்றி பல்வேறு அவதூறு தகவல்களை பரப்புகின்றனர்.
நான் குஜராத்தில் பணியாற்றியபோது அந்த மாநில முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்குமாறு முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அந்த தவறை நான் செய்யவில்லை. அதற்கான என்னை பழிவாங்குகின்றனர் என்றார் ஆர்.பி.குமார்.
இஸ்ரோ உளவு வழக்கு பின்னணி
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தொடர்பான ஆவணங்களை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச் சேர்ந்த நம்பிநாராயணன் உள்ளிட்ட 2 விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு அளித்ததாக 1994-ல் புகார் எழுந்தது. இதில் மாலத்தீவைச் சேர்ந்த 2 பெண்களுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் கடந்த 1998-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அண்மையில் திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த அவர், இஸ்ரோ உளவு விவகாரத்தில் அப்போதைய மத்திய உளவுத் துறை இணை இயக்குநர் ஆர்.பி.குமாருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.
ஏற்கெனவே இளம்பெண் வேவு விவகாரத்தில் மோடி பெயர் அடிபடும் நிலையில் தற்போது இஸ்ரோ உளவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருடன் மோடி பெயரும் சேர்த்து அடிபடுவது இன்னொரு சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications