அரசியல், விளையாட்டு.. பன்முக திறமை கொண்ட 'மைசூர் மகாராஜா' உடையார் !
பெங்களூர்: மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீகண்ட தத்த நரசிம்மராஜ உடையார் விளையாட்டு மற்றும் அரசியல் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தவர்.
மைசூரை தலைநகராக கொண்டு கிபி 1399ஆம் ஆண்டு 1950ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர்கள் உடையார் அரசர்கள். இந்த வம்சத்தில் நாடு விடுதலை அடைந்த பிறந்தவர் ஸ்ரீகண்ட தத்த் நரசிம்மராஜ உடையார்.
1974ஆம் ஆண்டு அவரது தந்தையார் காலமான பிறகு மைசூர் அரச குடும்பத்தின் வாரிசானார். அவர் தமது கல்லூரி காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்.

மைசூர் பல்கலை. கேப்டன்
மைசூர் பல்கலைக் கழகத்தின் கிரிக்கெட் அண்யின் கேப்டனாக விளையாடியவர் ஸ்ரீ கண்ட தத்த நரசிம்மராஜ உடையார்

4 முறை எம்.பி
அதேபோல் அரசியலில் மிகுந்த ஈடுபாட்டை காட்டினார் ஸ்ரீகண்ட தத்த நரசிம்மராஜ உடையார். 1984, 1989 தேர்தல்களிலும் 1996, 1999 தேர்தல்களிலும் மைசூர் லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருமுறை தேர்தலில் தோல்வியையும் தழுவி இருக்கிறார்.

தசரா ஊர்வலங்களில்..
மைசூரில் நடைபெறும் தசரா ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றவை. அப்போது மைசூர் மகாராஜா குடும்பத்தினரை முன்னிறுத்தியே இந்த தசரா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

அரச தர்பார்..
மைசூர் தசரா திருவிழாவின் போது பழங்கால வழக்கப்படி 'பராக்.. பராக்' எல்லாம் கூறி அரச தர்பாரை மைசூர் மகாராஜா நடத்துவார். ஸ்ரீகண்ட தத்த நரசிம்மராஜ உடையார் காலத்திலும் மிகச் சிறப்பாக இவ்விழாக்கள் நடத்தப்பட்டன. இந்த தசரா திருவிழா காலத்தில் மைசூர் மகாராஜா யானை மீது அமர்ந்து வலம் வருவதும் வழக்கம்.

கிரிக்கெட் சங்கத்தில்
2007ஆம் ஆண்டு கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உடையார். ஆனால் 2010ஆம் ஆண்டு அவரை கும்ப்ளே அணி வீழ்த்தியது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் உடையார் தலைவரானார்.

கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக..
தான் வாழ்நாளில் உடையார் நேசித்ததில் ஒன்று கிரிக்கெட். அவர் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவே காலமாகியிருப்பது (வயது 60) குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications