முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மருமகள் கருணா சுக்லா கொரோனாவுக்கு பலி
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகளும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கருணா சுக்லா கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
ராய்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா சுக்லா கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 70. இவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மருமகள் ஆவார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடி பேராக உயரப்போகிறது. தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 28 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லாவும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த கருணா சுக்லா, கட்சியில் ஓரங்கட்டப்பட்ட காரணத்தால் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ரமன் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
70 வயதான கருணா சுக்லாவிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராய்பூரில் உள்ள ராமாகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்தார். இறுதி சடங்குகள் இன்று பலோதபஜாரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications