காங்கிரஸில் இருந்து விலகிய என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி பாஜகவில் சேர்ந்தார்
டெல்லி: காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரும், என்.டி. ராமாராவின் மகளுமான புரந்தேஸ்வரி பாஜகவில் சேர்ந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி. ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் விசாகப்பட்டினம் எம்.பி.யாக இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஒப்புதல் அளித்து நாடாளுமன்றத்தில் மசோதாவையும் நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரந்தேஸ்வரி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

அவர் வரும் தேர்தலில் பாஜக சார்பில் விசாகபட்டினம் அல்லது விஜயவாடா தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் தேர்தலில் பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சந்திரபாபு நாயுடுவுக்கும், புரந்தேஸ்வரிக்கும் ஒத்துப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?











Click it and Unblock the Notifications