மும்பையில் 7 அடுக்குமாடி குடியிருப்பில் தீ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
மும்பை: மும்பையில் 7 அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலியில் இருக்கிறது கைலாஷ் அபார்ட்மென்ட்ஸ் என்ற 7 அடுக்குமாடி குடியிருப்பு. இதில் இன்று அதிகாலை 3.15 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் வசித்த கௌதம் ஷாலிவன்(55), அவரது மனைவி பூர்ணிமா(50), அவர்களின் மகன் விஷால்(32), பேரன் ஆயுஷ்(10) ஆகியோர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
ஆனால் ஷார்ட் சர்க்யூட்டால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications