Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகமதாபாத்தே அலறிருச்சு..காலையில் ஏர்போர்ட்டில் காத்திருந்த ஷாக்! ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை மடக்கிய ATS.!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று காலை நான்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் ஏதேனும் சதித் செயலில் ஈடுபட திட்டமிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் பல்வேறு தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Four ISIS terrorists who came to Ahmedabad from Sri Lanka arrested

குறிப்பாக இந்தியாவில் ஐஎஸ்ஐ எஸ் அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வரும் தகவலால் இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்கள் துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐஎஸ்ஐஎஸ்: இந்த நிலையில் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று காலை நான்கு தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த நான்கு பேருமே இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், பாகிஸ்தானில் இருக்கும் தலைமையகத்தின் கட்டளைக்காக காத்திருந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விமான நிலையம்: இலங்கையைச் சேர்ந்த அந்த நான்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னை வழியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.10 மணியளவில் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பயணிகளை சோதனை செய்தனர் இதை எடுத்து அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அவர்களிடம் தீவிரமாக விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது.

விசாரணை: இது குறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேர் ரயில் அல்லது விமானம் மூலம் மே 18 அல்லது 19 ஆம் தேதி அகமதாபாத்துக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து 4 பேர் விமானம் மூலம் அகமதாபாத் வருவது உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

4 பேர் கைது: நேற்று காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் மூலம் சென்னை வழியாக அகமதாபாத் வந்த 4 பேர் இரவு 8.10 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் முகமது நுஸ்ரத், முகமது நஃப்ரான், முகமது ஃபாரிஸ் மற்றும் முகமது ரஷ்தீன் என்பது தெரியவந்துள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை: இது மட்டுமில்லாமல் அவர்கள் இந்தியாவில் எங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்? அவர்களுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கும்? ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் எங்கு எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்தும் அவர்களிடமிருந்து தகவல் பெற தீவிரவாத தடுப்பு படை போலீசார் முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு மற்றும் பெங்களூரில் ராமேஸ்வரம் வழக்குகளில் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளில் நடமாட்டம் இருப்பதாக போலீசார் சந்திக்கின்றனர் .

உச்சகட்ட பாதுகாப்பு: பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்ததும் என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பீட படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தான் தற்போது நான்கு தீவிரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குஜராத் மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+