மகாராஷ்டிராவில் பெண் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த ஃபேப்இந்தியா உழியர்
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள ஃபேப்இந்தியா கடையில் பெண் ஒருவர் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவாவின் கன்டோலிம் நகரில் இருக்கும் ஃபேப்இந்தியா கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டுபிடித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடைக்கு சீல் வைத்து ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் உள்ள தாராபாய் பார்க்கில் இருக்கும் ஃபேப்இந்தியா கடைக்கு பெண் ஒருவர் தனது கணவருடன் கடந்த 31ம் தேதி சென்றுள்ளார். உடை வாங்கிய அவர் அதை போட்டுப் பார்க்க பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் பணிபுரியும் பிரகாஷ் ஏ. இஸ்புர்லே தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்து அந்த பெண் உடை மாற்றிய அறையின் கதவுக்கு கீழ் இருந்த ஓட்டை வழியாக உள்ளே போட்டுள்ளார்.
இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து கடை ஊழியர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பிரகாஷ் அந்த போனை எடுத்து பதிவானவற்றை அழித்துவிட்டார். அவர் இவ்வளவு செய்தும் கடை ஊழியர்கள் அவரை தடுக்கவில்லை யாம்.
இதையடுத்து அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை ஆய்வு செய்தனர். அதில் பிரகாஷ் பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் செல்போனை நைசாக போட்டது பதிவாகியிருந்தது. உடனே போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications