யெச்சூரியைத் தாக்கிய இந்து சேனா தொண்டர்கள்.. இருவரையும் நையப்புடைத்த கம்யூனிஸ்ட் கட்சியினர்
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை இந்து சேனா அமைப்பின் தொண்டர்கள் 2 பேர் தாக்கினர். அவர்களைப் பிடித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
டெல்லியில் இன்று விவசாயிகள் பிரச்சினை குறித்து பேட்டியளிப்பதாக யெச்சூரி கூறியிருந்தார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.

அவர் பிரஸ் மீட்டுக்கு வர விருந்த நிலையில், யெச்சூரியை சுமார் 2 இளைஞர்கள் சூழ்ந்து தாக்க முற்பட்டனர். உடனே அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள், அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி, அடி, உதை கொடுத்தனர். இதன்பிறகு அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யெச்சூரி காயமின்றி தப்பினார்.
#WATCH One of the 2 protesters who tried to manhandle Sitaram Yechury during his press conf. in Delhi, later beaten up;handed over to Police pic.twitter.com/NRUcrljB2W
— ANI (@ANI_news) June 7, 2017
போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் பவன்குமார் கெளல் மற்றும் உபேந்தர் குமார் என்று தெரிய வந்தது. இருவரும் இந்து சேனா அமைப்பினர். இதன் தலைவராக இருப்பவர் விஷ்ணு குப்தா. இந்த இருவரும் தாக்குதல் நடத்தியபோது இந்து சேனா வாழ்க என்றும் கோஷம் போட்டபடி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து புகார் வந்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் துணை போலீஸ் கமிஷனர் பி.கே.சிங் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications