அப்பப்பா.. தாங்கமுடியலை.. காற்று மாசால் டெல்லி- நியூயார்க் யுனைடெட் ஏர்லைன்ஸ் கேன்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லி- நியூயார்க் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது.

From Delhi to Newyork airlines has been canceled due to Air pollution

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

காற்று மாசு அளவு ஆபத்து அளவை எட்டியதால் டெல்லியில் மட்டும் அடுத்த வாரம் வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகள் நடத்த, அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து இயங்கும் கனரக வாகனங்கள் நகரத்தில் இயங்கவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறுக்க முடியாத காற்று மாசால் டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
From Delhi to Newyork airlines has been canceled due to Air pollution. Delhi air pollution crossed the limit.
Please Wait while comments are loading...