முஸ்லீம் முதியவர் படுகொலை பற்றியெல்லாம் பிரதமர் பேச மாட்டாராமே.. கத்காரி சொல்கிறார்!
டெல்லி: தாத்ரி படுகொலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்துக் கூற மாட்டார். அது அவரது வேலை அல்ல என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கக்தாரி.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பிரதமர் வாய் திறப்பதில்லை என்பது நாடு முழுவதும் உள்ள பொதுவான குற்றச்சாட்டு. இந்த நிலையில் பெரும் சர்ச்சையையும், கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய தாத்ரி படுகொலை குறித்து பிரதமர் பேச மாட்டார். அது அவரது வேலை அல்ல என்று மத்திய அமைச்சர் கத்காரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் தாத்ரி கிராமத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி ஒரு முஸ்லீம் முதியவரை மத வெறிக் கும்பல் கொடூரமாக அடித்துக் கொன்ற இந்த சம்பவம் குறித்து இதுவரை பிரதமர் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கத்காரி அளித்துள்ள ஒரு பேட்டியில் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பதில் தருவது பிரதமரின் வேலை அல்ல என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கத்காரி அளித்துள்ள பேட்டி...

இப்படி பேசினால் அப்படி.. அப்படி பேசினால் இப்படி
பிரதமர் ஏதாவது கருத்துக் கூறினால் ஏன் அப்படிக் கருத்துக் கூறினார் என்பார்கள். பேசாவிட்டால், ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள். என்ன இது.

எல்லாத்துக்கும் பேச முடியுமா
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிரதமர் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியுமா. அது அவரது வேலை அல்ல. உள்துறை அமைச்சர் இருக்கிறார், பிற அமைச்சர்கள் உள்ளனர்.

மன்மோகன் பேசினாரா
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏதாவது பேசினாரா. அமைதியாகத்தானே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர் மெளனம் காத்தார்.

புகார் சொல்வதே "மைனாரிட்டி"களின் வேலை
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இப்படி மோடியை குறை சொல்வதே இந்த "மைக்ரோஸ்கோப்பிக் மைனாரிட்டி"களின் வேலையாகி விட்டது. தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் அரசு நிச்சயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்.

யாருக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல
இந்த அரசு தெளிவான கொள்கையுடன் ஆட்சி புரிந்து வருகிறது. நாங்கள் எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும் விரோதமானவர்கள் அல்ல என்று கூறியுள்ளார் கத்காரி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications