வெளிச்சம் பரவுகிறது.. தேமாகவின் வெற்றி முகம்.. ஜம்மு காஷ்மீரில் பஞ்சு பஞ்சா போயிருச்சா பாஜக கனவு?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? பிடிக்காதா? என்று கணிப்புகள் வலம்வந்தநிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை வகித்து வருவகிறது.. இதையடுத்து, அக்கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்கு பிறகு, சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. இம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடக்கும் தேர்தல் என்பதால், இன்றைய தினம் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற ஆவல் இந்தியா முழுவதும் கவ்வியிருக்கிறது.

jammu kashmir election results jammu kashmir assembly election results 2024 congress bjp 2024

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த 1949-ம் வருடத்திலிருந்து, அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுத்துவந்த சிறப்புச் சலுகையை, பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ல் நீக்கிவிட்டது... அத்துடன், மாநில அந்தஸ்திலிருந்த ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது...

அதன்படி, லடாக், சட்டமன்றம் இல்லாத தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது-. இதற்கு நாலாபக்கமிருந்தும் எதிர்ரப்புகள் கிளம்பியது.. ஆனாலும், மொத்த பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தேர்தல்: இப்படி பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு நடுவில்தான், 90 இடங்களுக்கான ஜம்மு - காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் கடந்த செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது..

2 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், என்சி-காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கணிப்புகள் வெளியாகியிருந்தன. இதுவே பாஜகவுக்கு மிகப்பெரிய மைனஸாக பார்க்கப்பட்டு வருகிறது.
மாஸ்டர் பிளான்: இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டியது. பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 5 பேர் எம்எல்ஏகளாக ஆக உள்ளனர்.. ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் உறுப்பினர்களாக லெப்டினென்ட் கவர்னரால் பரிந்துரைக்கப்படும் இந்த 5 பேர்தான் யூனியன் பிரதேசத்தில், அடுத்த ஆட்சியை அமைப்பதில் மிக முக்கிய பங்கினை வகிப்பார்கள் என்று தகவல்கள் வலம்வந்தன.

அதுமட்டுமல்ல, துணைநிலை ஆளுநருக்கே 5 எம்எல்ஏக்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இவர்களில் 2 பெண்கள், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர், காஷ்மீர் பண்டிட்டுகள் என்ற இட ஒதுக்கீ்டுபடி நியமனம் செய்யப்படுகிறார்கள்.. இந்த 5 நியமன உறுப்பினர்களுக்கும் மற்ற எம்எல்ஏக்களைப் போலவே, அதே அதிகாரங்களும் வாக்களிக்கும் உரிமைகள் உண்டு. அதன்படி இவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம்.. அதேபோல, சட்டம் இயற்றப்படும்போது மசோதாவிற்கு ஆதரவும் அளிக்கலாம்.

மசோதா: ஒருவேளை, மெஜாரிட்டி கிடைப்பதில் கட்சிகளுக்கு சிக்கல் வந்தால், துணை நிலை கவர்னர், தான் நியமிக்கும் 5 எம்எல்க்களை துணை கொண்டு ஆட்சியை அமைப்பதில் முனைப்பு காட்டலாம் என்றெல்லாம் தகவல்கள் பரபரத்தன.

ஆனால், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன... 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றும், 39 இடங்களில் முன்னிலையும் வகித்தும், 42 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் கொண்டுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது..

வெற்றி வாய்ப்பு: அப்படியானால், இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெற்று, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளது.
ஆனால், பாஜகவோ, 62 தொகுதிகளில் போட்டியிட்டு, 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 23 தொகுதிகளில் லீடிங்கில் உள்ளது.. மொத்தத்தில் 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது..

அந்தவகையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியையும், இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியையும் பெற்றுள்ளது.. ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வராக ஒமர் அப்துல்லா தேர்வு செய்யப்படுவார் என்றம் தகவல்கள் பரபரத்து கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+