Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் வெல்வாரா? காண்டே தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு.. களநிலவரம்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட்டில் 2வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் என்பது நாளை நடைபெற உள்ளது. இதில் காண்டே தொகுதியில் போட்டியிடும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அவர் வெல்வரா? களநிலவரம் என்ன ? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.

ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதாவது 2019 முதல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த சோரன் முதல்வராக உள்ளார்.

jharkhand assembly election 2024 hemant soren kalpana soren

இந்த மாநிலத்தில் பாஜக எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஜார்கண்ட்டில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட்டை பொறுத்தவரை அது சிறிய மாநிலம் தான். இங்கு மொத்தம் 81 தொகுதிகள் உள்ளது. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 இடங்களில் வெல்ல வேண்டும்.

அந்த வகையில் முதற்கட்டமாக கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 2வது கட்டமாக நாளை (நவம்பர் 20) மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் நாளைய ஓட்டுப்பதிவுக்காக ஜார்கண்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டியிடும் காண்டே சட்டசபை தொகுதியிலும் ஓட்டுப்பதிவு என்பது நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த தொகுதியின் நிலவரம் என்ன? கல்பனா சோரன் வெல்வாரா? என்பது பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

அதாவது ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் தற்போது காண்டே சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார்.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் தேர்வாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் பதவி சாம்பாய் சோரனுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் கல்பனா சோரன் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்பட்டது.

அதோடு காண்டே தொகுதியின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்எல்ஏவாக இருந்த சர்ப்பராஸ் அகமது அந்த கட்சியில் ராஜ்யசபா எம்பியாக கடந்த டிசம்பரில் ஆக்கப்பட்டார். இதையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காண்டே தொகுதிக்கு கடந்த மே மாதம் இடைத்தேர்தல் நடந்தது.

இதில் கல்பனா சோரன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் கல்பனா சோரன் 1,09,827 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளர் திலிப் வர்மா 82, 678 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். கல்பனா சோரன் 27,149 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 2வது முறையாக இந்த தொகுதியில் கல்பனா சோரன் போட்டியிட்டுள்ளார்.

இவரை எதிர்த்து கிரிதி மாவட்ட பாஜக தலைவர் முனியா தேவி களமிறங்கி உள்ளார். இவர் இதற்கு முன்பு ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் செயல்பட்டு வந்தார். முனியா தேவி கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு தான் அரசியலில் என்ட்ரி கொடுத்தார். மாவட்ட பரிஷத் உறுப்பினராக அவர் தேர்வானார். அதன்பிறகு ஜமுவா கிழக்கு மாவட்ட பரிஷத் தலைவரானார். 2022ம் ஆண்டில் மீண்டும் அவர் மாவட்ட பரிஷத் தலைவரானார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் இந்த தொகுதியில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனுக்கு பெரும் சவால் உள்ளது.

இருப்பினும் காங்கிரஸ் கட்சியுடன் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணியில் உள்ளதால் கல்பனா சோரன் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2019 சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் கட்சியின் வேட்பாளர் சர்ராஜ் அகமது வெற்றி பெற்றார். இவர் 65,023 ஓட்டுகள் பெற்று பாஜக வேட்பாளர் ஜெய் பிரகாஷ் வர்மாவை (பெற்ற வாக்குகள் 56,168) 8,855 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் வேட்பாளர் 15,361 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.

அதற்கு முன்பாக 2014 சட்டசபை தேர்தலில் பாஜகவின் ஜெய் பிரகாஷ் வர்மா வெற்றி பெற்றார். இவர் 48,838 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சாலிகான் சோரன் 38,559 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் சர்பராஸ் அகமது 35,727 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் வெல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+