பலாத்காரம் செய்யப்பட்டதை சொல்லாமலேயே மறைத்து விட்ட ஹைதராபாத் சாப்ட்வேர் என்ஜீனியர்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 2 டிரைவர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார் சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் என்ஜீனியர் என்று தெரிய வந்துள்ளது.

22 வயதான அந்தப் பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் சொல்லத் தயங்கியும், அஞ்சியும் அதை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத் போலீஸாரின் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத் புறநகரில் நடந்த கொடுமை

ஹைதராபாத் புறநகரில் நடந்த கொடுமை

கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்த பெண்ணை, 2 பேர் மால் ஒன்றிலிருந்து காரில் கடத்தி்சத் சென்றன். ஹைதராபாத்து்க்கு வெளியே ஒரு வனப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

6 மணி நேரம் நடந்த அவலம்

6 மணி நேரம் நடந்த அவலம்

கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் காரிலும், வனப்பகுதியிலுமாக அந்தப் பெண், இரண்டு டிரைவர்களிடமும் சிக்கி சீரழிந்துள்ளார்.

டிரைவர்கள் இருவரும் கைது

டிரைவர்கள் இருவரும் கைது

குற்றச் செயலில் ஈடுபட்ட சதீஷ், வெங்கேஸ்வரலு ஆகிய இரு டிரைவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

பெண்ணின் திருப்புமுனை புகார்

பெண்ணின் திருப்புமுனை புகார்

ஆனால் அந்தப் பெண் போலீஸில் கொடுத்த புகார்தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் தனது புகாரில் மறைத்துள்ளார். அதாவது, தான் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

பெண்ணின் புகார் சொல்வது என்ன....

பெண்ணின் புகார் சொல்வது என்ன....

அப்பெண் கொடுத்துள்ள புகாரில், நான் ஷாப்பிங் முடித்து விட்டு இரவு 9 மணிக்கு டாக்சி பிடித்தேன். அப்போது டாக்சிக்குள் இன்னொருவரும் டிரைவருடன் அமர்ந்திருந்தார். டாக்சி எனது ஹாஸ்டல் பக்கம் போகாமல் வேறு பக்கமாக போவதை உணர்ந்து நான் எனது போன் மூலம் நண்பர்களை அழைத்தேன். கத்தவும் தொடங்கினேன். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தி விட்டார். நான் இறங்கி ஓடி விட்டேன் என்று கூறியுள்ளார்.

ஏன் அப்படிச் சொன்னார்...

ஏன் அப்படிச் சொன்னார்...

இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் கூறுகையில், நடந்ததை எண்ணிப் பயந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையே அந்தப் பெண் மறைத்து விட்டார். உண்மையில், கொல்லூரு வனப்பகுதிக்கு அப்பெண்ணைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்னர்.

வீடியோ படம் சிக்கியது

வீடியோ படம் சிக்கியது

அந்தப் பெண்ணைக் காரில் கடத்திச் சென்றபோது கார், அருகில் உள்ள ஒரு பள்ளியைக் கடந்து சென்றபோது அந்தப் பள்ளியின் சிசிடிவி கேமராவில் அது பதிவாகியுள்ளது. ஆனால் காட்சி தெளிவாக இல்லை. இதுதொடர்பாக என்ஐஏ உதவியையும் நாடினோம். அவர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட கார் வால்வோ கார் என்பதைக் கண்டுபிடித்தோம். அந்தக் காரில்தான் அப்பெண் கடத்தப்பட்டார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+