ஜாட் போராட்டத்தின் போது பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் புகார்... 7 பேர் மீது வழக்குப்பதிவு
சண்டிகர்: ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் ஒருவர் முர்தால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் ஹரியானா மாநிலத்தில், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து 50 கி.மீ தொலைவில் முர்தால் என்ற பகுதியில், பெண்கள் பலர் போராட்டத்தின் நடுவே பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்பட்டது.

லாரி டிரைவர் ஒருவர், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சுமார் 50 பெண்களை போராட்டக்காரர்கள், வயல் வெளிக்குள் இழுத்துச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். கார்களில் பயணித்த பெண்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. சம்பவ இடத்தில் உள்ளாடைகள் சிதறிக்கிடந்தன' என்றார்.
லாரி டிரைவரின் இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்பாக இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என போலீசார் கூறிவந்தனர்.
இருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவை அம்மாநில காவல்துறை அமைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உள்ளாடைகளை கைப்பற்றி சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 7 பேர் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்ததாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 22ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள ஒரு நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications